இலங்கை பிரச்னையை கவனித்து வர்றோம்… மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்

புதுடில்லி:
கவனித்து வருகிறோம்… வருகியோம் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் நடந்து வரும் அரசியல் மாற்றங்களை இந்தியா கவனித்து வருகிறது. ஜனநாயக மற்றும் நெருங்கிய நட்பு நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் ஜனநாயக மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் மதிக்கப்படும் என நம்புகிறோம்.

அந்நாட்டு மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இலங்கை பார்லிமென்ட்டை அதிபர் சிறிசேன முடக்கி வைத்ததற்கு சபாநாயகர் ஜெயசூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னை கலந்து ஆலோசிக்காமல், அதிபர் தன்னிச்சையாக பார்லிமென்ட்டை முடக்கியதாகவும், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தன்னை பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையின் பிரதமர் யார் என்பதை பார்லிமென்ட் முடிவு செய்யட்டும் எனக்கூறி வருகிறார். இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை முற்றிலும் விலக்கி கொள்ள அதிபர் சிறிசேன உத்தரவிட்டு உள்ளார்.

ரணில், பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தை உடனடியாக காலி செய்யாவிட்டால், அதனை ஆக்கிரமிக்க ராஜபக்சே தரப்பு திட்டமிட்டு உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!