இலங்கை, லண்டனில் இருந்து பறந்து வந்து 2 தமிழ் சகோதரிகள் செய்த பகீர் செயல்!

இலங்கையில் இருந்து தமிழகம் வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் சிக்கிய பெண்ணின் பாஸ்போர்ட்டை நீதிமன்றம் முடக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரின் மனைவியான பராசக்தி (36) லண்டனைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மனைவியான செல்வி (36) கேரளாவை சேர்ந்த பாண்டிய ராஜன் என்பவரின் மனைவியான ஸ்ரீமதி (27) ஆகிய மூவரும் சகோதரிகள் ஆவார்கள்.

திருமணத்துக்கு முன்னரே திருடுவதை வழக்கமாக கொண்ட மூவரும் திருமணத்துக்கு பின்னரும் அதை விடவில்லை.

அதன்படி தமிழகத்தில் எங்கெல்லாம் கோவில்களில் திருவிழா நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு அங்கு வந்துவிடுவர்கள்.

பின்னர் திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி பெண்களிடம் இருந்து நகைகளை திருடுவார்கள். இதன் பின்னர் நகைகளை விற்று அதில் வரும் பணத்தை பங்கிட்டு கொள்வார்கள்.

அப்படி கடந்த கடந்த மார்ச், 4ம் திகதி கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது பராசக்தி, செல்வி, ஸ்ரீமதி ஆகியோர் விமானத்தில் பறந்து வந்து நகை பறிப்பில் ஈடுபட்டனர்.

ஆனால் இந்த முறை பொலிசாரிடம் மூவரும் சிக்கினார்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட மூவரும், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்களது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இந்த நிலையில் தனது பாஸ்போர்ட்டை தரக்கோரி, நீதிமன்றத்தில் பராசக்தி மனு தாக்கல் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொலிசார் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், பராசக்தி மீது, கோவை,சென்னை, புதுச்சேரியில் பல நகைபறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், பாஸ்போர்ட்டை திருப்பி கொடுத்தால், இலங்கைக்கு தப்பி சென்று விடுவார் என்றும் தெரிவித்து இருந்தனர்.

இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பராசக்தியின் பாஸ்போர்ட்டை திருப்பி கொடுக்க நீதிமன்றம் உத்தரவிடுமா என கேள்வியெழுந்த நிலையில் அவரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Sharing is caring!