இல்ல… அமெரிக்காவில் இல்ல… இன்டர்போல் தகவல்

புதுடில்லி:
அமெரிக்காவில் இல்ல… இல்ல… என்று இன்டர்போல் போலீஸ் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிப் பணத்தை மோசடி செய்து, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற மெஹுல் சோக்சி, அமெரிக்காவில் இல்லை’ என்று ‘இன்டர்போல்’ போலீஸ், மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் வைரவியாபாரம் செய்து வந்த, பிரபல தொழில் அதிபர், நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று வெளிநாட்டிற்கு தப்பினார்.

நீரவ் மோடியின் நெருங்கிய உறவினர், மெஹுல் சோக்சிக்கு, இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை,சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீரவ் மோடி, மெஹுல் சோக்கி உள்ளிட்டோர், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, சர்வதேச போலீசாரால்,
இவர்களுக்கு, ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ அளிக்கப்பட்டது. இந்நிலையில், மெஹுல் சோக்சி, அமெரிக்காவில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து, அவரை தேடும்படி சர்வதேச போலீசிடம், மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, மெஹுல் சோக்சியின் இருப்பிடம் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச போலீசார், ‘அவர், அமெரிக்காவில் இல்லை’ என உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!