இல்ல… கூட்டணி இல்ல… தனித்துதான் போட்டி… மாயாவதி சொல்லிட்டார்

புதுடில்லி:
இல்ல… சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்ல. தனித்துதான் போட்டியிட உள்ளோம் என்று அதிரடி வெடி போட்டுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;

திக்விஜய் சிங் போன்றோர் காங்கிரஸ் – பகுஜன் சமாஜ் கூட்டணியை விரும்பவில்லை. அவர்கள் அமலாக்கத்துறை, சிபிஐ -யை பார்த்து பயப்படுகின்றனர். பா.ஜ.,வின் ஏஜென்ட் போன்று செயல்படும் திக்விஜய் சிங், மத்திய அரசிடமிருந்து மாயாவதிக்கு நெருக்கடி வருகிறது. இதனால் கூட்டணியை அவர் விரும்பவில்லை எனக்கூறி வருகிறார். இதற்கு ஆதாரம் இல்லை.

எங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ராகுலும், சோனியாவும் விரும்பினர். ஆனால், காங்கிரசில் உள்ள சில தலைவர்கள் இதற்கு எதிராக சதி செய்து வருகின்றனர். அக்கட்சிக்கு ஆணவம் அதிகரித்து வருகிறது.

பா.ஜ.,வை சொந்த பலத்தில் வீழ்த்தி விடலாம் என தவறாக நினைக்கிறது. ஆனால், உண்மையில் காங்கிரஸ் செய்த தவறு மற்றும் ஊழலை மக்கள் மறக்கவில்லை. அவர்கள், தங்களை மறு ஆய்வு செய்ய விரும்பவில்லை.

ராஜஸ்தான், மபி மாநிலங்களில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம். காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். பா.ஜ.,வை போல் காங்கிரசும் பகுஜன் சமாஜ் கட்சியை அழிக்க நினைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!