இல்ல… பார்மலின் தடவலை… ஆய்வு பற்றி அமைச்சர் விளக்கம்
சென்னை:
இல்ல… இல்ல… பார்மலின் தடவப்படவில்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீன்பிடித்துறைமுகம், விற்பனையகம் உட்பட இடங்களில் மீன்களின் மாதிரிகள் சோதிக்கப்பட்டன. சென்னையில் விற்பனையாகும் மீன்களில் ஃபார்மலின் ரசாயனம் தடவப்பட்டிருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நன்றி- பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S