இல்ல… பேரம் ஏதும் பேசலை… விஜய்மல்லையா மறுப்பு

லண்டன்:
இல்ல… இல்ல… பேரம் ஏதும் பேசலை என்று தொழிலதிபர் விஜய்மல்லையா தெரிவித்துள்ளார்.

வங்கி கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக அமலாக்கத் துறையிடம் பேரம் பேசியதாக வெளியான தகவலை விஜய் மல்லையா மறுத்துள்ளார். முடக்கப்பட்ட தமது சொத்துகளை விடுவித்தால் வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாக மல்லையா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.

அவரது இந்த கோரிக்கையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நிராகரித்து விட்டதாகவும் தகவல்கள் பரபரப்பாக வெளியானது.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள விஜய் மல்லையா, முதலில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நான் பேரம் பேசியதாக கூறும் விவகாரத்தை எனது சொத்துகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தின் முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தால் அதை வரவேற்கக் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!