இளம்பெண்ணொருவர் 40 பேரால் பாலியல் பலாத்காரம்
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் இளம்பெண்ணொருவர் 40 பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 4 நாட்கள் அடைத்து வைத்து 40 பேர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சண்டிகரைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவரே பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவர்களிடமிருந்து தப்பித்து தனது வீட்டிற்கு வந்த பெண், வீட்டாரின் உதவியுடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்களின் அடிப்படையில், மத்திய பிரதேஷ் மாநிலத்தில் பொக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் 2,479 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறுவர் துஷ்பிரயோகத்தில் மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளதுடன், அங்கு 2,310 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
2,115 வழக்குகளுடன் உத்தர பிரதேஷ் மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் 319 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.