இளம் சாமியாரின் அதிரடி “நறுக்” விவகாரம்… மக்கள் அதிர்ச்சி

லக்னோ:
இளம் சாமியார் செய்த அதிரடி காரியத்தால் மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர். எதற்காக தெரியுங்களா?

உத்தர பிரதேசத்தில், தன் மீதான பாலியல் புகாரை பொய் என நிரூபிக்க, தனக்கு தானே பிறப்பு உறுப்பை அறுத்த, இளம் சாமியார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தில் பாம்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர், மதானி பாபா, 28. தன்னை தானே சாமியாராக அறிவித்த மதானி, அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே, ஆசிரமம் கட்டுவதற்காக முயற்சித்தார்.இந்நிலையில், அவர் வசிக்கும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் காதல் வயப்பட்டதாகவும், அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், மதானி பாபா மீது, அப்பகுதியை சேர்ந்த சிலர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, தன் மீதான புகார் பொய்யானது என நிரூபிக்க, மதானி பாபா, தன் பிறப்புறுப்பை தானே அறுத்தார். அதிக ரத்தப்போக்கால் மயக்கமடைந்த அவர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!