ஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

ஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஈராக்கின் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான பாராளுமன்றக் கூட்டம் நேற்று (02) நடைபெற்றது.

இதில் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த குர்தீஷ் தேசபக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சாலிஹ் (58 வயது) மற்றும் குர்தீஷ் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக பௌட் ஹூசைன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்தநிலையில், தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்ற பர்ஹாம் சாலிஹ், ஈராக்கின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், ஈராக்கின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் பாதுகாப்பேன் என உறுதியளிப்பதாக, பதவியேற்பின்போது புதிய ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ் தெரிவித்துள்ளார்.

நடந்துமுடிந்த தேர்தலின் வாக்குகளை இயந்திரங்கள் மூலம் எண்ணாமல், கைகளால் எண்ணும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, இதற்கான சட்டமூலம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்து.

Sharing is caring!