ஈராக் எல்லையில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 54 பேர் உயிரிழந்துள்ளனர்

சிரியா நாட்டின் கிழக்குப் பகுதியில் காணப்படும் ஈராக் எல்லையில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐ.எஸ் ஆயுததாரிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சிரியாவில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்றுவரும் நிலையில், ஐ.எஸ் ஆயுததாரிகள், உள்நாட்டு போராளிகளுக்கு உதவி செய்வதற்காக களமிறங்கியுள்ளனர்.இதனையடுத்து, ஐ.எஸ் ஆயுததாரிகளை அழிப்பதாக தெரிவித்து அமெரிக்கக்கூட்டு படைகளும் ஈராக்கில் நுழைந்து போரில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தத் நிலையில், ஈராக்- சிரியா எல்லைப்பகுதியில் பதுங்கியுள்ள ஐ.எஸ் ஆயுததாரிகள் மீது போர் விமானங்கள் மூலம் அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த தாக்குதலில் 28 பொதுமக்கள் உட்பட 54 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சிரியா போரை கண்காணித்து வரும் மனித உரிமைகள் குழுவொன்று தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் தாக்குதல் குறித்து இதுவரை அமெரிக்க படைகளின் தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!