ஈரானில் தற்கொலைப்படை பயங்கரவாதி தாக்குதல்: 4 பேர் பலி

ஈரான்:
ஈரானில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரானில் சபஹார் துறைமுக நகரில் உள்ள போலீஸ் தலைமையகம், முன் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.

ஈரானில் சபஹார் துறைமுக நகரில் உள்ள போலீஸ் தலைமையகம், முன் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், திடீரென வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 4 பேர் பலியாகி உள்ளனர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனால், அந்த பகுதியில் இருந்த கட்டிடங்கள், வாகனங்கள் சேதமடைந்துள்ளது. தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதி போலீஸ் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாக பாதுகாப்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை உயர் அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஈரான் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஈரானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!