உடனடியாக லோக்சபா தேர்தல் நடத்தினாலும் மோடியே பிரதமர்… கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடில்லி:
மீண்டும் பிரதமராக மோடி வருவார் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பார்லிமென்ட் லோக்சபாவிற்கு உடனடியாக தேர்தல் நடைபெற்றால் பா.ஜ. 281 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் எனவும் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக வருவார் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் லோக்சபாவிற்கு தேர்தல் நடக்க உள்ளது. இரு பெரும் தேசிய கட்சிகளான பா.ஜ., காங். ஆகியவை கூட்டணியை உறுதி செய்யாத நிலையில் தற்போது லோக்சபாவிற்கு உடனடியாக தேர்தல் நடந்தால் யார் ஆட்சியை பிடிப்பார் என்பது குறித்து இந்தியா டி.வி. மற்றும் சி.என்.எக்ஸ் இணைந்து கருத்து கணிப்பினை மாநிலங்கள் வாரியாக வெளியிட்டுள்ளது.

அதன்படி தற்போதைய பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 281 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங். தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் மற்றவை 138 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் அந்த கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!