உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி மனைவி தயாளு

சென்னை:
திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கருணாநிதி மனைவி தயாளு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு தயாளுவுக்கு, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடன் அவர் ஆம்புலன்சில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கருணாநிதியின் மகள்கள் செல்வி, கனிமொழி, துணைவி ராஜாத்தி உட்பட உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!