உட்கட்சி விவகாரமா? பாஜ தலைவரை சந்திக்கிறார் ஓ.பி.எஸ்.,
புதுடில்லி:
உட்கட்சி விவகாரத்தால் பாஜ தேசிய தலைவரை துணை முதல்வர் ஓ.பி.எஸ். சந்திக்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களை டில்லி சென்றுள்ள துணை முதல்வர் பன்னீர் செல்வம் இன்று (24ம் தேதி) சந்திக்க உள்ளார்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன், டில்லி புறப்பட்டு சென்றார். மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை அவர் இன்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. உட்கட்சி விவகாரம் தொடர்பாகவே, அவர் டில்லி சென்றுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
நன்றி- பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S