உணவு கிடைக்காமல் 3 சிறுமிகள் பலியான சம்பவம்.. லோக்சபாவில் எதிரொலிப்பு

புதுடில்லி:
உணவு கிடைக்காமல் 3 சிறுமிகள் பரிதாபமாக பலியான சம்பவம் லோக்சபாவில் ஒலித்துள்ளது.

டில்லியின் மண்டவுலி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 8, 4, 2 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை மயங்கிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், 3 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையில், சிறுமிகள் உணவில்லாமல் பசியில் இறந்தது தெரியவந்தது. விசாரணையில் 8 நாட்களாக அவர்கள் சாப்பிடாததும் தெரிந்தது. இதையடுத்து அவர்களின் வீட்டில் சோதனை நடத்திய தடயவியல் துறை அதிகாரிகள், மருந்து, மாத்திரைகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

சிறுமிகள், பெற்றோருடன், இந்த பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் குடிவந்ததாகவும், கூலி தொழிலாளியான தந்தை கடந்த சில நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக லோக்சபாவில் பா.ஜ., எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர்.

டில்லியில் ரேசன் விநியோகத்தில் ஊழல் நடப்பதாகவும், மானிய விலை உணவு பொருட்கள் ஏழைகளை சென்றடைவது கிடையாது. அடுத்தவரை குற்றம்சாட்டி அரசியல் செய்வதையே ஆம் ஆத்மி வழக்கமாக கொண்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!