உணவை வீணாக்கினால் அபராதம்… சவுதி செம அதிரடி நடவடிக்கை

சவுதி:
அபராதம்… அபராதம்… இனி அபராதம்தான் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

சவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் உணவுக்கு அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
சவுது அரேபியாவில் தினமும் தயார் செய்யப்படும் உணவுகளில் சுமார் 40 சதவீதம் வீணாவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் அதிகளவில் உணவுகளை வீணாக்கும் நாடுகளில் சவுதி அரேபியா முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சவுதி அரேபியா அரசு அதிரடியான முடிவை எடுத்துள்ளது. வீணடிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவிற்கும் ஆயிடம் ரியால் அபராம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம், உணவு பதப்படுத்தும் நிலையம், உணவங்கள் மற்றும் திருமண மண்டபம் போன்றவைகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்களின் உரிமை ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி உத்தரவு அனைத்து தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த உத்தரவை பலரும் வரவேற்றுள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!