உனக்கு பாதி… எனக்கு பாதி… பீஹாரில் கூட்டணி உடன்பாடு?

புதுடில்லி:
நீ பாதி… நான் பாதி… என்று தொகுதி பங்கீடு நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் பீஹார் மாநில ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி, பா.ஜ., இடையே 50:50 என்ற கணக்கில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தலை நாடு சந்திக்க உள்ளது. பீஹாரில் தற்போது பா.ஜ., ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சில நாட்களுக்கு முன் டில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இரு கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, ஐ.ஜ., தள தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தினர். இதில் பீஹாரில் இரு கட்சிகளும் 50:50 என்ற கணக்கில் தொகுதிகளை பங்கீடு செய்து கொள்வது என முடிவானதாக தெரிகிறது.

இதுகுறித்து பா.ஜ. வட்டாரங்கள் கூறுகையில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பா.ஜ., – ஐக்கிய ஜனதா தள கட்சிகள் 16-17 என்ற கணக்கில் தொகுதி பங்கீடு செய்து கொள்வது எனவும், மீதமுள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளான ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரித்து அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!