உயரமான… மிக உயரமான ராமர் சிலை… உ.பி. அறிவிப்பு

லக்னோ:
உயரமான… மிக உயரமான ராமர் சிலை அமைக்கப்படும் என்று உ.பி. மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த சிலையின் உயரம் எவ்வளவு தெரியுங்களா?

அயோத்தியில் 221 மீ., உயரம் கொண்ட ராமர் சிலை அமைக்கப்படும் என உத்தரபிரதேச மாநில அரசு கூறியுள்ளது. உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், இந்து கடவுளான ராமர் பிறந்த இடத்தில், கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ‘அயோத்தியில், ராமருக்கு மிக பிரமாண்டமான சிலை அமைக்கப்படும்’ என, முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்தாண்டு அறிவித்தார். இந்நிலையில், உ.பி., அரசின் முதன்மை செயலர் அவினாஸ் அவஸ்தி கூறுகையில், அயோத்தியில், 221 மீட்டர் உயரத்தில் ராமருக்கு வெண்கலத்தில் சிலை அமைக்கப்பட உள்ளது. ராமர் சிலையின் பாதங்களுக்கு கீழ் அமையும் பீடம் 50 மீ., உயரமும், அதற்கு மேல் 151 மீ., உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலையும், 20 மீ., உயரத்தில் குடையும் வடிவமைக்கப்படும்.

சிலைக்கு கீழ் அமையும் அடித்தளத்தில், அயோத்தியின் வரலாறு, ராமஜென்மபூமியின் பின்னணி உள்ளிட்ட விவரங்களை விளக்கம் நவீன அருங்காட்சியகமும், கடவுள் விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களையும் குறித்த விரிவான விளக்கங்களும் இடம்பெறும். சிலை அமைப்பதற்கான உரிய இடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அங்கு மண் மற்றும் காற்று ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படுவதாக கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!