“உயர்த்திக் கொள்ளலாம்… 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம்”

புதுடில்லி:
உயரத்திக் கொள்ளலாம்… உயர்த்திக் கொள்ளலாம் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முல்லை பெரியாறு அணை 152 அடி நீர்தேக்கும் அளவிற்கு வலுவாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.

மேலும் அணையின் நீர்மட்டத்தை நிரந்தரமாக 139 அடியாக குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட், முல்லை பெரியாறு அணையை சர்வதேச நிபுணர்கள் ஆய்வு செய்ய அவசியமில்லை. அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 142 அடியாக உயர்த்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது.

கடந்த மாதம் கேரளாவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தின் போது கேரளா தாக்கல் செய்த கோரிக்கை மனுவை ஏற்ற சுப்ரீம் கோர்ட், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை செப்டம்பர் முதல் வாரம் வரை 139 அடியாக குறைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!