உரிய மரியாதையை அளிக்கப்படவில்லை

இங்கிலாந்து நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டு மகாராணி எலிசபெத்தை வெயிலில் 10 நிமிடங்கள் காக்க வைத்ததாகவும், உரிய மரியாதையை அளிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாமதம்:
பிரிட்டன் மகாராணி எலிசபெத்தை, உலக நாட்டு தலைவர்கள் சந்திக்கும்போது, மரியாதை சார்ந்த சில சம்பிரதாய நடத்தைகள் உள்ளன. இதை கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 4 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றார். நேற்று அரண்மனைக்கு சென்று மகாராணி எலிசபெத்தை சந்தித்தார். அப்போது குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல், 10 நிமிடம் தாமதமாக டிரம்ப் வந்தார்.

பிரிட்டனில் தற்போது வெயில் காலம். இதனால் மகாராணி, அங்கிருந்த சிறு தடுப்பின் நிழலில் 10 நிமிடம் காத்திருந்து டிரம்பை வரவேற்றார். அணிவகுப்பு மரியாதையின் போது, மகாராணிக்கு இணையாக நடக்காமல், 2 அடிக்கு முன்னால் நடந்தார்.

மகாராணி முன் தலை குனியாமல், கைகுலுக்கினார் டிரம்ப். இவையெல்லாம் பிரிட்டனில் பரபரப்பாக பேசப்படுகின்றன.

Sharing is caring!