உலகம் முழுவதும் மீண்டும் போர் மூளும் அபாயமுள்ளது

உலகம் முழுவதும் மீண்டும் போர் மூளும் அபாயமுள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.

இதனைத் தவிர்ப்பதற்கு அனைத்து நாடுகளும் பொறுப்புடன் நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (13) நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு பேரவைக்கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது இரசாயனத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கும் ஐ.நா செயலாளர் நாயகம் கண்டனம் வௌியிட்டுள்ளார்.

சிரியாவில் இடம்பெறும் மோதல்கள், ஏனைய பல நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் யுத்த சூழ்நிலைகளின் பின்னணியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!