உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலை தொடக்கம்

நொய்டா:
உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

டில்லி அருகே நொய்டாவில் பிரபல சாம்சங் செல்போன் நிறுவனத்தின் தொழிற்சாலை 35 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையான இதை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த நிறுவனம் ஆண்டுக்கு 120 மில்லியன் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் திறனை கொண்டதாகும்.

இந்த செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைக்க பிரதமர் மோடி மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே ஆகியோர் நொய்டாவுக்கு டில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.
மெட்ரோ ரயிலில் அருகருகே அமர்ந்தபடி இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். பிரதமர் மோடியும் தென்கொரிய அதிபரும் மெட்ரோ ரயிலில் நின்ற பயணிகளுக்கு கை அசைத்தனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!