உலகின் மிகவும் வயதான பெண்மணியான 117 வயதான சியோ மியாகோ ஜப்பானில் மரணம்

உலகின் மிகவும் வயதான பெண்மணியான 117 வயதான சியோ மியாகோ ஜப்பானில் மரணம் அடைந்தார்.

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்யோ வை சேர்ந்தவர் சியோ மியாகோ. இவர் கடந்த 1901 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி பிறந்தவர். இவர் உலகின் மிகவும் வயதான பெண்மணி ஆவார். இவர் தனது குடும்பத்தினருடன் ஜப்பானில் டோக்யோ நகரில் வசித்து வந்தார்.

சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர் தனது 117 வயதில் மரணம் அடைந்துள்ளார். நேற்று இவருடைய குடும்பத்தினர் இவரது மரணத்தை அறிவித்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த வருடம் தெற்கு ஜப்பான் பகுதியை சேர்ந்த நபி தாஜிமா மறைந்த பிறகு இவரே உலகின் வயதான பெண்மணியாக இருந்து வந்தார்.

தற்போது இவர் மறைவுக்குப் பின் உலகின் வயதான பெண்மணி யார் என்பதை கின்னஸ் தேடி வருகிறது. தற்போதுள்ள தகவலின்படி ஜப்பான் நட்டை சேர்ந்த கேன் தனாகா என்னும் 115 வயது பெண்மணி உலகின் வயதானவர் என கூறப்படுகிறார். மேலும் இது குறித்து ஆய்வு செய்த பின் கின்னஸ் இது குறித்து அறிவிக்க உள்ளது.

Sharing is caring!