உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 4 வருடங்களின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் மசகு எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த கோரிக்கையை சவுதி அரேபியாவும் ரஷ்யாவும் நிராகரித்ததைத் தொடர்ந்து ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 81 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது.

Sharing is caring!