உலளாவியரீதியில் 55 தொன்னிற்கும் அதிகளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

உலளாவியரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கொக்கெய்ன், ஹெரோயின், மில்லியன் கணக்கான போதைவில்லைகள் உள்ளிட்ட 55 தொன்னிற்கும் அதிகளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்டபோல் பொலிஸ் தெரிவித்துள்ளது.

இந்த சுற்றிவளைப்பு 93 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, 1,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தென்கிழக்காசிய நாடுகளில் 18 மில்லியனுக்கும் மேற்பட்ட போதைவில்லைகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!