உள்ளூர் மொழியிலும் இனி அறிவிப்பு… விமான நிலையங்களுக்கு உத்தரவு

புதுடில்லி:
விமான நிலையங்களில் இனி உள்ளூர் மொழியிலும் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்தி, ஆங்கிலத்தை அடுத்து உள்ளூர் மொழியிலும் பொது அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அனைத்து விமான நிலையங்களுக்கு அரசு உத்தரவை அனுப்பியுள்ளது.

உள்ளூர் மொழியிலும் பொது அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக தனியார் விமான நிறுவனங்களுக்கும் தகவலை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

அனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழியிலும் அறிவிப்பை வெளியிட தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். பொது அறிவிப்பு வெளியாகாத விமான நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-ல் இந்திய விமான நிலைய ஆணையம் அனைத்து விமான நிலையங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், இந்தி, ஆங்கிலத்தை அடுத்து உள்ளூர் மொழியிலும் அறிவிப்பை வெளியிட கேட்டுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது.

அங்கு உள்ளூர் மொழியிலும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்ததை அடுத்து மத்திய அமைச்சகம் இம்முடிவை எடுத்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!