உ.பி. கலவரத்தில் இன்ஸ்பெக்டர் கொலை சம்பவம்… எஸ்எஸ்பி இடமாற்றம்

லக்னோ:
பசு கொல்லப்பட்டு கிடந்ததை கண்டு ஏற்பட்ட கலவரத்தில் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எஸ்எஸ்பி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உ.பி.,யில், புலந்ஷஹர் மாவட்டத்தில், சமீபத்தில், பசு கொல்லப்பட்டு கிடந்ததை அடுத்து, பயங்கர கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், சுபோத் குமார் உட்பட இருவரை, மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலவரம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் கொலை தொடர்பாக ராணுவ வீரர் ஜீது பாஜி என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை தேடி போலீசார் காஷ்மீர் விரைந்துள்ளனர்.

இந்நிலையில் புலந்ஷர் மாவட்ட எஸ்எஸ்பி கிருஷ்ணா பகதூர் சிங், லக்னோ தலைமையிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பிரபாகர் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சர்கிள் அதிகாரி சயானா சத்யாபிரகாஷ் சர்மா மொராதாபாத்திற்கும், சிங்ரவாடி சவுகி பொறுப்பு போலீஸ் அதிகாரி சுரேஷ்குமாரும் லலித்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!