உ.பி. தலைமை செயலகத்தில் வாஜ்பாய் சிலை… முதல்வர் அறிவிப்பு

லக்னோ:
உ.பி. தலைமை செயலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலை வைக்கப்பட உள்ளது.

உ.பி. மாநிலம் லக்னோவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் முதல்வர் யோகிஆதி்த்யநாத், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இம்மாநிலம் பல்ராம்பூரில் தனது அரசியல் பயணத்தை துவங்கி லக்னோ தொகுதியின் எம்.பி.யாக 5 முறை தேர்வு பெற்றார். நல்லாட்சி என்ற சொல்லுக்கு அஸ்திவாரமாக விளங்கிய அவரை கவுரவிக்கும் விதமாக அரசு தலைமை செயலகத்தில் 25 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்றார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!