ஊட்டியில் இந்து மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்

ஊட்டி:
விநாயகர் சதுர்த்தி விழா குறித்து இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேவா சார்பில் ஊட்டியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கோவை மாவட்டம் சார்பில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய தலைவர் ஸ்ரீமான் எஸ்.வி. ஸ்ரீதரன்ஜி, தேசிய பொதுச்செயலாளர் ஜோதிட சாம்ராட் ஸ்ரீபிரசன்ன சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். சுருளி மலை சித்தர் திருச்சி அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடர் ஓம்பரமானந்த பாபாஜி சுவாமிகள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!