ஊட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை

ஊட்டி:
ஊட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி தலைமையில் லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடிசோதனை மேற்கொண்டனர்.

இதில் சோதனையில் 7 புரோக்கர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 980-ஐ பறிமுதல் செய்தனர். கணக்கில் வராத பணம் குறித்து வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திகுமாரிடம் விசாரித்து வருகின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!