ஊரடங்கை மீறுபவர்களை கண்ட இடத்தில் சுட உத்தரவு..!!

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளில்தான் முடங்கியிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு ஊரடங்கு உத்தரவை மீறி வீதிகளில் நடமாடினால் கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தெலுங்கானாவில் நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அமெரிக்காவைப் போல சட்டம் ஒழுங்கை கடுமையான நடவடிக்கை மூலம் பாதுகாப்போம். மாநில பாதுகாப்பை இராணுவத்திடம் கொடுத்துவிடுவோம்

பொதுமக்களில் பலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் நடமாடுவதை பார்க்கும்போது அச்சம் ஏற்படுகிறது. ஊரடங்கு உத்தரவு சட்டத்தை மீறுபவர்களுக்கு சில நாடுகளில் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

ஆனால் தெலுங்கானாவில் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி நடமாடினால் கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கவும் நேரிடும் என்று முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த எச்சரிக்கையால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Sharing is caring!