எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் புதல்வர்கள் இருவர் கைது

எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் புதல்வர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பங்குச் சந்தை மற்றும் மத்திய வங்கியின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே அலா (57 வயது) மற்றும் கமல் முபாரக் (54 வயது) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2012 ஆம் ஆண்டு சந்தேகநபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோதிலும், இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

எனினும், நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும், அடுத்த மாதம் 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Sharing is caring!