எச்சரிக்கை… எச்சரிக்கை… பார்லி.,யை தகர்க்க சதி திட்டம்… உளவுத்துறை எச்சரிக்கை

புதுடில்லி:
எச்சரிக்கை… எச்சரிக்கை காலிஸ்தான் விடுதலைப்படையினர் தாக்குதல் நடத்த திட்டம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டில்லியில் உள்ள பார்லிமென்ட் கட்டடத்தை தகர்க்க, காலிஸ்தான் விடுதலை படையினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.

டில்லியில், அடுத்த மாதம், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் சுதந்திர தின நிகழ்ச்சியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட அரசு வாகனத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் பார்லி., கட்டடத்தை தகர்க்க, சீக்கிய அமைப்பான, காலிஸ்தான் விடுதலை படையினர் திட்டமிட்டு உள்ளதாகவும், உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தானின், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, காலிஸ்தான் விடுதலை படையினர், பஞ்சாப் உட்பட பல பகுதிகளில் இருப்பதுடன், இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியிலும் உள்ளனர்.

இதுகுறித்து டில்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பார்லி., கட்டடம் மீது, காலிஸ்தான் விடுதலை படையினர் தாக்குதல் நடத்த உள்ளதாக, உளவுத் துறை எச்சரித்துள்ளது. நேபாள எல்லையில் இருந்து, உத்தர பிரதேச மாநில பதிவு எண்ணுடன் வெடி பொருட்கள் நிரம்பிய காருடன், லக்வீந்தர் சிங் மற்றும் பர்மிந்தர் சிங் என்னும் இரண்டு பயங்கரவாதிகள், டில்லியை நோக்கி வருவதாக இக்பால் என்பவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய தொலைபேசி அழைப்பு, உத்தரகண்ட் மாநிலம், உதம் சிங் நகரில் இருந்து வந்தது. தகவலின் உண்மை தன்மை குறித்து ஆராய, போலீஸ் குழுவினர் உத்தரகண்ட் சென்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!