எண்ணெய்த் தாங்கியொன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளனர்

கொங்கோ குடியரசின் மேற்குப் பகுதியில், எண்ணெய்த் தாங்கியொன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் கின்ஷசா மற்றும் மாட்டாடிக்கும் இடையிலுள்ள கிஸாண்டு நகரிலியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதனிடையே, இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மத்திய கொங்கோவின் ஆளுநர் அடௌ மடபுவான (Atou Matabuana) தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற இதேபோன்றதொரு விபத்தில் 220 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!