எதிரிகள் அல்ல… சகோதர, சகோதரிகள்தான்… கர்நாடக முதல்வர் சொல்றார்

திருப்பதி:
எதிரிகள் அல்ல… சகோதர, சகோதரிகள்தான் என்று முதல்வர் சொல்லியிருக்கார். எதற்காக தெரியுங்களா?

‘தமிழக, கர்நாடக மக்கள் எதிரிகளல்ல; சகோதர சகோதரிகள்’ என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி சாமி தரிசனம் செய்த கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்ததாவது:

இரு மாநில அரசுகள் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்தினால் மேகதாது பிரச்னைக்கு சுமூக தீர்வு ஏற்படும். இயற்கை வளங்களை ஒன்றிணைந்து பிரித்து கொண்டால் இரு மாநில விவசாயிகளுக்கும் நலன் கிடைக்கும்.

தமிழக, கர்நாடக மக்கள் எதிரிகளல்ல; சகோதர சகோதரிகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!