எத்தனை தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம்… ஓ.பி.எஸ். சொல்றார்

திருப்பூர்:
எத்தனை தேர்தல் வந்தாலும், எதிரிகளால் இடையூறு ஏற்பட்டாலும், அதனை முறியடித்து வெற்றி பெறுவோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. 3 எம்எல்ஏக்களின் நிலை குறித்து சபாநாயகர் விளக்கம் கேட்டு உள்ளார். விளக்கம் வராவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

2011 முதல் இதுவரை தனித்தே ஆட்சி அமைத்து உள்ளோம். எத்தனை தேர்தல் வந்தாலும், எதிரிகளால் இடையூறு ஏற்பட்டாலும், அதனை முறியடித்து வெற்றி பெறுவோம். மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!