எந்த வதந்தியையும் நம்பாதீங்க… கமல் சொல்றார்
சென்னை:
நம்பாதீங்க… எந்த வதந்தியையும் நம்பாதீங்க என்று தன் கட்சியினருக்கு கமல் அட்வைஸ் செய்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும்,
நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். நாளைநமதே.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S