என்கிட்ட உன் ஜம்பம் பலிக்காது… வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை குரைத்தே துரத்திய வளர்ப்பு நாய்

குன்னுார்:
என்கிட்ட உன் ஜம்பம் பலிக்காது என்பது போல் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை வளர்ப்பு நாய் விரட்டியடித்துள்ளது.

ஊட்டி – குன்னுார் சாலையில், வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை, வளர்ப்பு நாய் விரட்டிய சம்பவம், ‘சிசிடிவி’ கேமராவில் பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி- குன்னுார் சாலையில் உள்ள மைனலை மட்டம் பகுதியில், நேற்று நள்ளிரவு ஒரு வீட்டு காம்பவுண்டுக்குள் சிறுத்தை புகுந்தது.

இதை கண்டதும், வீட்டில் இருந்த வளர்ப்பு நாய், பலமாக குரைக்கத் துவங்கியது. சிறுத்தை வெளியேறும் வரை ஆக்ரோஷமாக குரைத்துக் கொண்டே இருந்தது. வேறு வழியில்லாத சிறுத்தை அங்கிருந்து வெளியேறியது.

இந்த சம்பவம் முழுவதும் அந்த வீட்டில் இருந்த, சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!