“என்னங்க செஞ்சார்… கட்சிக்காக… சிறைக்கு போனாரா?”

சென்னை:
என்னங்க செஞ்சு இருக்கார்… கட்சிக்காக… கட்சிக்காக என்று கேள்வி எழுப்பி உள்ளார் முதல்வர் பழனிச்சாமி. இது யாரை நோக்கி தெரியுங்களா?

மதுரை பாண்டிகோவிலில் சாதனை சைக்கிள் பயணத்தை துவக்கி வைக்கும் கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது:

மாநிலத்தில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தினகரன் கொல்லைப்புறமாக வர துடிக்கிறார். அவர் கட்சிக்காக என்ன பணியாற்றினார். யார் இந்த தினகரன்? எத்தனை முறை சிறை சென்றார்? நான் 4 முறை சிறை சென்றுள்ளேன்.

எத்தனையோ பெரிய தலைவர்கள் வாழ்ந்த இந்த நாட்டில் மீடியாக்கள் யார் என்று தெரியாமல் இருக்கும் நபர்களை பெரிதுப்படுத்தி வருகின்றனர். டிவிக்கள் இவ்வாறு நடந்து கொள்வது வருத்தமாக இருக்கிறது. பெரிய தலைவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் , இப்படிப்பட்டவரும் வாழ்ந்து கொண்டிருக்க்கிறார்.

இவரையும் டிவியில் காட்டி வருகிறீர்கள். இந்த ஆட்சியை கலைக்க தினகரன் துடிக்கிறார். தீய சக்தியோடு சேர்ந்து செயல்படுகிறார். ஜெயலலிதா தன்னை அர்ப்பணித்து ஆட்சி செய்தார். தினகரன் துரோகி ஆவார். அதிமுகவை அழிக்க நினைத்தால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!