என்னாச்சு… குழப்பத்தில் தவிக்கின்றனர் அதிமுக எம்பிக்கள்

புதுடில்லி:
என்னாச்சு… குழப்பத்தில் தவிக்கின்றனர் அதிமுக எம்பிக்கள் என்று தெரிய வந்துள்ளது.

‘மேகதாது அணையை கர்நாடகா கட்ட அனுமதிக்கக் கூடாது’ என, தினமும் பார்லிமென்டில் கோஷமிட்டு, சபை நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர்,

அ.தி.மு.க., – எம்.பி.,க்கள். மேலும், தினமும் பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், பதாகைகளுடன், அ.தி.மு.க., – எம்.பி.,க்கள் நின்று, ஆர்ப்பாட்டமும் நடத்தி வந்தனர்.

ஆனால், திடீரென இந்த ஆர்ப்பாட்டம் நின்று போனது; தவிர, லோக்சபாவிலும், மையத்திற்கு வராமல் உட்கார்ந்த இடத்திலேயே அதிக சத்தமில்லாமல் கோஷமிட்டனர். இதற்குக் காரணம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை என்கின்றனர், அ.தி.மு.க., – எம்.பி.,க்கள்.

உடல்நிலை சரியில்லாமல், ஊரில் இருந்த தம்பிதுரை டில்லி வந்துவிட்டார். ‘எதற்கு இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்; லோக்சபாவில், உட்கார்ந்த இடத்திலேயே பதாகைகளைக் காட்டுங்கள்’ என தம்பிதுரை, ‘அட்வைஸ்’ தந்ததாக, அ.தி.மு.க., – எம்.பி.,க்கள் கூறியுள்ளனர்.

‘என்னாச்சு? ஏன் சபை ஒத்தி வைக்கப்படவில்லை? மேகதாது பிரச்னையை ஏன் எழுப்பவில்லை?’ என சென்னையிலிருந்து கேள்விகள் வந்துள்ளது. பின், சபையில் மீண்டும் கோஷங்கள். ஆனால், அதற்குள் சபை நடவடிக்கைகள் நடந்தேறி விட்டன. இப்படி அங்கும் இங்கும் என்று குழப்பத்தில் தவிக்கின்றனர் அதிமுக எம்பிக்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!