“என்.ஆர்.ஐக்கள் தகவல் பெற விண்ணப்பிக்க முடியாது”

புதுடில்லி:
என்.ஆர்.ஐ.க்கள் தகவல் பெற விண்ணப்பிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

‘என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய அரசு துறைகளிடம் இருந்து தகவல் பெற விண்ணப்பிக்க முடியாது’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் மத்திய பணியாளர் நலத்துறை இணைஅமைச்சர் ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் அளித்த பதில்: இந்திய குடிமக்கள் மட்டுமே, ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அரசு தொடர்பான விபரங்களை பெற, விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஆர்.டி.ஐ., விண்ணப்பங்களை தாக்கல் செய்ய முடியாது. தற்போது, 2,200 அதிகாரிகள், ஆர்.டி.ஐ., விண்ணப்பங்களை பெற்று, பரிசீலித்து பதில் அளிக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!