என் தலைமுடியை கூட தொட முடியாது… அமெரிக்காவிற்கு வெனிசுலா அதிபர் சவால்

காராகஸ்:
எனது தலை முடியைக் கூட அமெரிக்காவால் தொட முடியாது என்று அமெரிக்காவை வெனிசுலா அதிபர் கடுமையாக சாடியுள்ளார்.

வெனிசுலா நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக கூறி அமெரிக்கா பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பொருளாதார தடை விதித்துள்ளது. அந்நாட்டு அதிபரான நிக்கோலஸ் மடூரோவை கொலை செய்ய பக்கத்து நாட்டிற்கு அமெரிக்கா உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாயின.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ கூறியதாவது: என்னை கொலை செய்ய பக்கத்து நாடான கொலம்பியாவுக்கு, அதிபர் டிரம்பின் அமெரிக்க அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். எனது தலை முடியைக் கூட அமெரிக்காவால் தொட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!