எப்போ விழுமோ… எப்போ விழுமோ… அச்சத்துடன் மக்கள்!

கொள்ளிடம்:
எப்போ விழுமோ… என்ற அச்சத்துடன் மக்கள் நடமாடி வருகின்றனர். என்ன விஷயம்ன்னா…

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் இருந்து மகேந்திரப்பள்ளிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் மாங்கணாம்பட்டு கிராமத்தில் சாலையோரம் மின் மாற்றி அமைந்துள்ளது. இதன்மூலம் மாங்கணாம் பட்டு மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் தெரு விளக்குகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மின் மாற்றியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து வேகமாக காற்று வீசினால் முறிந்து விழும் நிலை உள்ளது. மேலும் இம் மின்மாற்றிக்கென அமைக்கப்பட்டுள்ள பியூஸ் கேரியர் பொருத்தப்படுள்ள இரும்பு பெட்டி ஆபத்தான வகையில் பெயர்ந்து தரையில் கிடக்கிறது. எனவே பழைய மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் பொருத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!