எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு… விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி:
மறுப்பு… மறுப்பு தெரிவித்துள்ளது சுப்ரீம் கோர்ட். எதற்கு தெரியுங்களா?

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற, சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இதை விசாரிக்கும் 3வது நீதிபதியாக சத்தியநாராயணானை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. வழக்கை விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கியுள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.,க்கள் 18 பேர் முதல்வர் பழனிசாமியை மாற்றும்படி கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். இவர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு மூன்றாவது நீதிபதியிடம் விடப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றக் கோரி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்களில் தங்க தமிழ்ச்செல்வன் தவிர 17 பேர் சார்பிலும் மூத்த வக்கீல் விகாஸ் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்பது என்பது குறித்து முடிவு செய்யும் மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கவுல் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: தகுதி நீக்க வழக்கை சென்னை ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற முடியாது. 3வது நீதிபதியாக நீதிபதி சத்தியநாராயணன் நியமிப்படுவார். இவர் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும்.

வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். நீதிபதி விமலா மீதான குற்றச்சாட்டுகளை எம்எல்ஏக்கள் திரும்ப பெற வேண்டும். எந்தவொரு நீதிபதி மீதும் இவ்வாறு குற்றச்சாட்டு கூறுவது சரியாக இருக்காது. நீதிபதி மீது குற்றச்சாட்டு கூறி இதுபோன்று மனுவை தாக்கல் செய்யக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!