எம்ஜிஆர் மருத்துவ பல்கலை., துணைவேந்தரானார் சுதாசேஷையன்

சென்னை:
நியமனம்… டாக்டர் சுதா சேஷையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்ன விஷயம் தெரியுங்களா?

எம்ஜிஆர் மருத்துவ பல்கலை., துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷையன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, கவர்னர் பன்வாரிலால் பிறப்பித்துள்ளார்.

அவர் பணி நியமன உத்தரவை, கவர்னர் பன்வாரிலாலை நேரில் சந்தித்து சுதா சேஷையன் பெற்று கொண்டார். 30 வயதில் டாக்டராக பணியை துவங்கிய இவர் எழுத்தாளர் ஆவார்.

மருத்துவம், ஆன்மிகம் தொடர்பாக புத்தகங்களை எழுதியுள்ளார். சிறந்த பேச்சாளராகவும் உள்ள அவர், ஆன்மீக இசையிலும் ஆர்வம் உள்ளவர். எம்ஜிஆர் பல்கலை., ஒருங்கிணைப்பாளராகவும், பதிவாளராகவும் பணியாற்றியுள்ள சுதா சேஷையன், முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்,அவரது உடலை எம்பார்மிங் செய்யும் குழுவிலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!