எம்ஜிஆர் மாஸ் மலேசியா தேர்தலிலும் எதிரொலிப்பு

மலேசியா:
எம்ஜிஆர் மாஸ் மலேசியாவிலும் கை கொடுக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மலேசியாவில் நடக்கும் இடைத் தேர்தலில் ஓட்டுகளை பெறுவதற்கு எம்ஜிஆர் பாடல்கள் பயன்படுகின்றன. எம்.ஜி.ஆர்., பாடலுக்கு அந்நாட்டு முன்னாள் துணை பிரதமர் நடனமாடினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மலேசியாவின் செலங்கூர் பகுதியில் உள்ள செரி செடியா என்ற இடத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, பகதான் ஹர்பான் என்ற கட்சி கூட்டணி சார்பில் வேட்பாளர் களத்தில் உள்ளார். அவருக்கு ஆதரவாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரசாரம் செய்து வருகிறார்.

இவர் முன்னாள் துணை பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசா மந்திர் பகுதியில், இந்திய கலசாசார இரவு என்ற நிகழ்ச்சி நடந்தது. இதன் ஒரு பகுதியாக எம்ஜிஆர் வேடமணிந்த ஒருவர் எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற நான் ஆணையிட்டால் பாட்டுக்கு நடனமாடி கொண்டிருந்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்வர் இப்ராஹிம், மேடையில் ஏறி பாடலுக்கு நடனமாடினார். இதற்கு அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவே எம்ஜிஆர் பாடல்களை ஒலிக்க விடுகிறார்கள்.

தமிழகத்தில் மட்டுமல்ல, மலேசியாவிலும் அரசியலுக்கு எம்.ஜி.ஆர்., பாடல்கள் பயன்படுவது ஆச்சரியம் தான். அவரு மாஸ் அப்படிங்க…

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!