எம்ஜிஆர் ஸ்டைலில் போஸ்டர்… அதிமுகவில் புகைச்சல்

திருச்சி:
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அடித்துள்ள போஸ்டர்தான் பெரிய பேச்சாக உள்ளது திருச்சி முழுவதும்.

உடல்நலம் குன்றியதன் காரணமாக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நீக்கப்பட்டார். எம்.பி. குமார் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். மாவட்ட செயலாளர் பதவியில் நீக்கப்பட்டதால் தன்னை அதிகாரிகள் மதிப்பதில்லை என தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் புகார் கூறி வந்தார்.

ஈகோ காரணமாக அவ்வப்போது ஆய்வு கூட்டங்களை நடத்தியும் வருகிறார். இதன் ஒரு பகுதியாக தனது மகன் ஐவஹர்லால் நேருவின் மகன் பாகுலேயன் காதணி நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தவும், அந்த விழாவிற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வரை அழைத்து தனது வெயிட்டை காட்டவும் முடிவு செய்தார்.

இந்த விழா இன்று கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளின் ஒன்றாக எம்ஜிஆர் ஸ்டைலில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரின் கையில் தனது பேரன் இருப்பது போன்ற போஸ்டர்களை அடித்து மாநகரம் முழுவதும் ஒட்டியிருக்கிறார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். இந்த விவகாரம் கட்சி நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!