எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி… விரைவில் நடக்கும்… துணை முதல்வர் சொல்றார்

சென்னை:
மத்திய அரசு கொள்கை ரீதியாக எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முறைப்படி, மத்திய அமைச்சரவை கூடி அங்கீகாரம் அளிக்க வேண்டும். இது கூடிய விரைவில் நடக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

தமிழக மக்களுக்கு தீங்கு இழைக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு எதிர்க்கும். கருணாஸ் கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கருணாஸ் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை நீங்கள் கூறி தான் தெரியும்.

மத்திய அரசு கொள்கை ரீதியாக எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முறைப்படி மத்திய அமைச்சரவை கூடி அங்கீகாரம் அளிக்க வேண்டும். இது கூடிய விரைவில் நடக்கும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்கள் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டன.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிந்தால் கொடுக்கலாம்.
திமுக ஆதாரமில்லாமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதனை நாங்கள முறியடிப்போம். அதிமுகவில் இதுவரை 1 கோடியே 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இது முழுமையாக முடிந்த பிறகு தேர்தல் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!