எரித்திரியா மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்கு, ஐ.நா. பாதுகாப்புப் பேரவை இணக்கம்

கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியா மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்கு, ஐ.நா. பாதுகாப்புப் பேரவை இணங்கியுள்ளது.

சோமாலியாவிலுள்ள அல் ஹபாப் கிளர்ச்சியாளர்களுக்கு எரித்திரியா உதவுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, 2009 ஆம் ஆண்டு ஆயுதத்தடை, பயணத்தடை மற்றும் சொத்து முடக்கம் ஆகியவவை விதிக்கப்பட்டன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை எரித்திரியா மறுத்திருந்தது.

அயல் நாடுகளுடனான மோதல்போக்கைத் தவிர்த்து, நல்லுறவைப் பேணுவதால் எரித்திரியா மீதான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதாக, ஐ.நா. பாதுகாப்புப் பேரவை அறிவித்துள்ளது.

அதேநேரம், இரு தசாப்த காலமாக நிலவிய மோதல்போக்கை விடுத்து, கடந்த ஜூன் மாதம், எத்தியோப்பியாவுடனான சமாதான உடன்படிக்கையை முன்னெடுப்பதற்கு எரித்திரியா இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!