எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்ததில் குறைந்தது 35 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் நசராவா மாகாணத்தில் நேற்று (10), எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்ததில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாநில இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதில் முகாமையாளர் உஸ்மன் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் நைஜீரியாவின் தலைநகர் லாகோஸ் நகரில் எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்ததில் குறைந்தது 9 பேர் பலியானதோடு, மேலும் 53 வாகனங்கள் தீக்கிரையாகியமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!